விமானம் தாமதம் காரணமாக தென்கொரியாவிற்கு வேலை வாய்ப்புக்காக செல்ல முடியாமல் தவித்த 48 பேர் நாடு திரும்புவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 4 ஆம் திகதி காலை 05.00 மணிக்கு தென்கொரியாவிற்கு வருமாறு மனிதவள திணைக்களம் குழுவினரை அறிவித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் நேற்றிரவு (23) தென்கொரியா நோக்கிப் புறப்பட வேண்டிய விமானம் சுமார் 10 மணித்தியாலங்கள் தாமதமானதால் இன்று (24) காலை விமானம் புறப்படும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்திருந்தது.
எவ்வாறாயினும், குறித்த நபர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என தென்கொரியாவின் மனிதவள திணைக்களம் அறிவித்துள்ளது.