சிறுத்தை தாக்குதலில் படுகாயமுற்ற தோட்டத் தொழிலாளி மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்தியர் எஸ்.ஏ.கே.ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பிரிட்வெல் தேயிலைத் தோட்டத்தில் இன்று புதன்கிழமை (24) வேலை செய்துகொண்டிருந்த போதே குறித்த தொழிலாளி சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
அவருடைய முகத்தில் படுங்காயம் ஏற்பட்டுள்ளதோடு, கையையும் கடித்து காயப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்தச் சிறுத்தை காட்டுக்கு விரட்டியடிக்குமாறு நல்லத்தண்ணி வனசீவராசிகள் அலுவல உத்தியோகத்தர்களுக்கு தெரிவித்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்