நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பல்வேறு கருத்துகள் அடங்கிய பதாகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவ்வாறான பதாகை ஒன்றின் புகைப்படத்தை பிரதமர் மஹிந்தவின் மருமகள் டட்டியானா தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
அதில் “தந்தையாரே அவர்களை மன்னித்து விடுங்கள், என்ன செய்கிறோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
அவர் தந்தை என தனது மாமனாரை குறிப்பிட்டிருக்கலாம் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனினும் அவர் யாரை தந்தை என குறிப்பிட்டுள்ளார் என்பது தெரியவில்லை.