20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி புத்தாண்டு தினத்தன்று கொன்னொறுவ, கட்டன்வெவ பிரதேசத்தில் 30 வயதுடைய திருமணமாகாத ஒருவரை வெட்டிக் கொன்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் இந்த மரண சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்த நபரை பொல்லுகளாலும் கூரிய ஆயுதங்களாலும் தாக்கியுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்துஇ 21 சந்தேகநபர்கள் முதலில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
பின்னர் வழக்கு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் சுருக்கப்படாத விசாரணைகளின் பின்னர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
சாட்சியங்களை கவனமாக பரிசீலித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பு வெற்றிகரமாக நிரூபித்துள்ளது.
இதன் விளைவாகஇ அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மீதமுள்ள 15 குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் விடுவிக்கப்பட்டனர்.