தென்கொரியாவுக்கு பணியாளர்களாக செல்லவிருந்த 48 பேர் தமது தொழில் வாய்ப்பை இழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு 8.05க்கு தென்கொரியாவின் இச்சிகோனுக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் 10 மணிநேரம் தாமதமாகியமையே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது
இதன் காரணமாக நேற்று (23) தென்கொரியாவிற்கு பணிக்காக செல்லவிருந்த 48 தொழிலாளர்களை கொரிய மனிதவள திணைக்களம் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.
இந்த 48 தொழிலாளர்கள் தென் கொரியாவில் உற்பத்தி, கட்டுமானம் மற்றும் மீன்பிடித் துறைகளின் கீழ் பணியாற்றுவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் விமானத்தின் தாமதம் காரணமாக அவர்களை ஏற்க தென் கொரிய மனித வள திணைக்களம் மறுத்துள்ளது.