பிளே – ஓவ் போட்டியின் வெற்றிக்கு பிறகு ஓய்வு குறித்து சிஎஸ்கே அணியின் அணித்தலைவர் தோனியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
‘இங்கே மீண்டும் சேப்பாக்கத்தில் வந்து விளையாடுவீர்களா?’ என்று தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, தோனி நேரடியாக பதில் அளிக்கவில்லை என்றாலும், ஐபிஎல் முடிந்தவுடன் தனது விளையாட்டு குறித்து உடனடியாக முடிவு செய்யமாட்டேன் என்று தெளிவாக பதிலளித்துள்ளார்.
இது குறித்து தோனி மேலும் தெரிவிக்கையில்,
ஓய்வு குறித்து எனக்கு தெரியாது. அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலத்திற்கு இன்னும் 8, 9 மாதங்கள் இருக்கிறது. எனவே இப்போது ஏன் அது பற்றி யோசிக்க வேண்டும்.
அது எதுவாக இருந்தாலும் சரி. விளையாட்டிலோ அல்லது வெளியே எங்கேயாவது உட்கார்ந்தோ நான் எப்போதும் சென்னை அணிக்காக இருப்பேன். வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. நான் இப்போது நான்கு மாதங்களாக ஃபார்மில் இல்லை.
ஜனவரி 31 ஆம் திகதி நான் எனது வேலையை முடித்துவிட்டு மார்ச் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் பயிற்சி செய்யத் தொடங்கினேன். ஓய்வு குறித்து முடிவெடுக்க நிறைய நேரம் எடுக்கும். எனக்கு போதுமான நேரம் இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.