இலங்கை தேசிய விளையாட்டு பேரவை பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளது.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்த்தன தேசிய விளையாட்டு பேரவைக்கு தலைமை தாங்கினார்.
விளையாட்டுக் கொள்கை விடயங்களில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2020 ஒகஸ்ட்டில் தேசிய விளையாட்டு பேரவை நியமிக்கப்பட்டது.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பதவி விலகியதை அடுத்து, தற்போது இந்த குழுவும் பதவி விலகியுள்ளது.
இதில் குமார் சங்கக்கார உள்ளிட்டவர்களும் உறுப்பினர்களாக இருந்தனர்.