தரமற்ற க்றீம்களை விற்பனை செய்த பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபரம் குறிப்பிடப்படாத நிலையில் க்றீம்களை இணையத்தின் வாயிலாக விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கொஸ்வத்தையில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் குறித்த பெண் வசித்த வீட்டிலிருந்து ஆயிரம் கிறீம் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.