Tuesday, December 23, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீன மீன்பிடி கப்பலில் உயிரிழந்த எழுவரின் சடலங்கள் மீட்பு

சீன மீன்பிடி கப்பலில் உயிரிழந்த எழுவரின் சடலங்கள் மீட்பு

இந்திய மத்திய பெருங்கடலில் கடந்த வாரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சீன மீன்பிடிக் கப்பலில் பயணித்த ஏழு பணியாளர்களின் உடல்களை இலங்கை நீர்மூழ்கிக் குழுவினர் மீட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை 39 பணியாளர்களுடன் பயணித்த Lu Peng Yuan Yu 028 என்ற சீன மீன்பிடி கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதனையடுத்து சீனாவின் கோரிக்கைக்கு இணங்க அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மாலைத்தீவு மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுள் மீட்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வந்தன.

இந்நிலையில் கப்பலின் அறையில் இருந்த உடல்களை இலங்கை நீர்மூழ்கிக் குழுவினர் கண்டுபிடித்து மீட்டுள்ளதாகச் சீன போக்குவரத்து அமைச்சு திங்கட்கிழமை (22) தெரிவித்துள்ளது.

சிதைந்த கப்பல் மெதுவாகக் கிழக்கு நோக்கி நகர்வதாகவும் சிசிடிவி காட்சிகளை மையப்படுத்தி சீன ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles