Saturday, November 16, 2024
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசொத்து மதிப்பு அறிக்கையை வழங்குமாறு தொழிற்சங்கங்களுக்கு அறிவிப்பு

சொத்து மதிப்பு அறிக்கையை வழங்குமாறு தொழிற்சங்கங்களுக்கு அறிவிப்பு

பதிவு செய்யப்பட்ட அனைத்து தொழிற்சங்கங்களினதும் செயற்குழு உறுப்பினர்கள், தங்களது சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை அடுத்த மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கைகளை தொழிலாளர் அமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தொழிற்சங்கங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, தொழிலாளர் சட்ட சீர்த்திருத்தங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பொய்யான கருத்துக்களை வெளியிடும் நபர்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்துமாறு கடிதம் மூலம் காவல்துறை மா அதிபர், அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது இது தொடர்பான முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுவரையில் புதிய சட்டங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles