ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்துக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இராணுவமும் காவல்துறையும் இணைந்து விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா காவல்துறையிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய, கொழும்பில் முக்கிய இடங்களில் முப்படையினரை நிறுத்துவதற்கும், காவல்துறை வீதித்தடைகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் அவர்களை நிலைநிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.