Thursday, July 3, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் 5 ஹோட்டல்களுக்கு பூட்டு

கொழும்பில் 5 ஹோட்டல்களுக்கு பூட்டு

கொழும்பு, புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் இயங்கி வந்த 05 ஹோட்டல்களை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனியின் ஆலோசனையின் பிரகாரம், ஒல்கொட் மாவத்தையில் அமைந்துள்ள ஹோட்டல்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் விசேட பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த பரிசோதனையின் போது சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இயங்கி வந்த மேற்படி ஹோட்டல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன் பின்னர் குறித்த ஹோட்டல்கள் சம்பந்தமான அறிக்கை மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles