இந்துருவ பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து 27 வயதுடைய யுவதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கெசெல்வத்த பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தரை கொஸ்கொட பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகத்திற்குரிய பொலிஸ் உத்தியோகத்தரின் நோய்வாய்ப்பட்ட தாயாரை பராமரிக்கும் பெண்ணின் மகளே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
யுவதியின் தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் இருந்த 10,000 ரூபா பணம் காணாமல் போனமை தொடர்பில் பணிப்பெண்ணிடம் கேட்டமைக்காகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்தார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் யுவதி மருத்துவ பரிசோதனைக்காக பலப்பிட்டி அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சந்தேகநபர் பலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.