மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வடாரின் தலைநகரில் சல்வடார் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி போட்டி நேற்று நடைபெற்றது.
இதனை பார்வையிட சென்ற ரசிகர்களுக்கு டிக்கெட் வைத்திருந்த போதிலும், உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த ரசிகர்கள் குறிப்பிட்ட நுழைவு வாயிலை தகரத்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றுள்ளனர்.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய முயன்றதை அடுத்து, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்
அத்துடன், 100க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததுடன், அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.