Saturday, March 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டை இறக்குமதியை அதிகரிக்க நடவடிக்கை

முட்டை இறக்குமதியை அதிகரிக்க நடவடிக்கை

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் அங்குள்ள கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்வதற்காக பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியா சென்றுள்ளது.

சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும், அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவரும் இந்தியாவிற்கு சென்றுள்ளதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, ​​இந்தியாவில் 03 கோழிப்பண்ணைகளில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதுடன், இந்த அளவு போதுமானதாக இல்லாதமையினால், சில புதிய பண்ணைகளை அடையாளம் காண்பதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

அதன்படி நாளாந்தம் சுமார் ஒரு மில்லியன் முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles