Monday, July 21, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனாவுக்கு குரங்கு ஏற்றுமதி செய்வதற்கு எதிரான மனு விசாரணைக்கு திகதியிடப்பட்டது

சீனாவுக்கு குரங்கு ஏற்றுமதி செய்வதற்கு எதிரான மனு விசாரணைக்கு திகதியிடப்பட்டது

இலங்கையில் இருந்து சீன நிறுவனமொன்றுக்கு 100,000,000 குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சுற்றாடல் அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (19) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்ததுடன், இந்த வழக்கு தொடர்பான உண்மைகளை முன்வைக்க திகதியையும் கோரினார்.

அதன்படி, இந்த மனு வரும் 26ம் திகதி மீண்டும் அழைக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கை வனவிலங்கு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு சங்கம், மாத்தறை ஆனந்த சாகர தேரர், ஒட்டாரா குணவர்தனஇ ருக்ஷான் ஜயவர்தன உள்ளிட்ட 27 பங்குதாரர்களால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles