Tuesday, June 23, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜூன் மாதத்தில் புதிதாக 7,800 ஆசிரியர்கள் நியமனம்

ஜூன் மாதத்தில் புதிதாக 7,800 ஆசிரியர்கள் நியமனம்

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை தீர்க்கும் வகையில் கல்வியியற் கல்லூரியில் பயிற்சிபெற்ற 7,800 டிப்ளோமாதாரிகளுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்காலத்தில் விஞ்ஞானம் தொழில்நுட்பம் மற்றும் மொழி போன்ற ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடப் பிரிவுகளுக்கு அங்கீகாரம் பெற்று 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளை தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles