Thursday, July 10, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடவுச்சீட்டு வழங்கும் முறையில் மாற்றம்

கடவுச்சீட்டு வழங்கும் முறையில் மாற்றம்

எதிர்வரும் ஜூன் முதல் விமான கடவுச்சீட்டுகளை வழங்கும் முறையில் மாற்றம் செய்யப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போது கடவுச் சீட்டுகளை பெறுவதற்கு கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடவுச்சீட்டுகள் முன்பதிவு முறையில் வழங்கப்பட்டன.அதன்படி, முன்பதிவு செய்தவர்கள் அந்த நிர்ணயிக்கப்பட்ட திகதி மற்றும் நேரத்தில் வந்து சேவைகளைப் பெற வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் சில தரகர்கள் சட்டவிரோதமான முறையில் மக்களுக்கு சேவைகளை வழங்க முற்பட்டதால் முன்பதிவு செய்யும் பணியை நிறுத்த நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்களை ஏமாற்றி பணம் பறித்த பெரும் எண்ணிக்கையிலான தரகர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.

இதனால் மீண்டும் பழைய முறைமை அடுத்தமாதம் முதல் அமுலுக்கு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles