Monday, September 15, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பதற்றம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பதற்றம்

வடக்கு கிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் கொழும்பு – பொரளையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிலையில் பொரளை சுற்றுவட்டத்தில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஒரு சில தரப்பினர் இடையூறு விளைவித்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் பயங்கரவாதத்தை தோற்கடிப்போம், புலிகளை நினைவுக்கூர வேண்டாம் என்ற பதாதைகளை ஏந்தி, போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்து அங்கு பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

அருட்தந்தை சத்திவேல், பிரபல சட்டத்தரணிகள், மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னலிகொட உள்ளிட்டக் குழுவினர் மிகவும் அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கலந்து கொண்டார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles