ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தினர் இடையில் இன்று(18) மாலை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள வரித் திருத்தம் உள்ளிட்ட விரிவுரையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சிக்கல்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.