மனநிலை பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி மற்றும் 13 வயது சிறுவனை சித்திரவதை செய்த தாயொருவர் பேலியகொட பொலிஸாரால் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய் வேலைக்குச் சென்று வீடு திரும்பும் வரை இரண்டு குழந்தைகளையும் மிகவும் பாதுகாப்பற்ற அறையில் தங்க வைத்துள்ளதாகவும், பிள்ளைகளின் கல்வி மற்றும் போஷாக்கை கவனிக்காது அவர்களை சித்திரவதை செய்வதாகவும் தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபரான தாய் 26 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
களனி – தோரண சந்தி – வனவாச வீதியில் உள்ள வீடொன்றில் தாயும் இரண்டு பிள்ளைகளும் தற்காலிக வாடகை அடிப்படையில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு பிள்ளைகளும் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரான தாயார் இன்று அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.