Friday, September 12, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசார்ல்ஸ், செந்தில், லக்ஷ்மன் ஆகியோர் ஆளுநர்களாக பதவிப்பிரமாணம்

சார்ல்ஸ், செந்தில், லக்ஷ்மன் ஆகியோர் ஆளுநர்களாக பதவிப்பிரமாணம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (17) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று முற்பகல் புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும், வடமாகாண ஆளுநராக தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

முன்னதாக, பி.எஸ்.எம்.சார்ள்ஸ் 2019 – 2021 வரையான காலப்பகுதியிலும் வடக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles