Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுதியவரொருவர் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்பு

முதியவரொருவர் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் நேற்று (16) மாலை முதியவரொருவரின் சடலம் தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கோப்பாய், வடக்கு கட்டுப்பலான பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

தனிமையில் வசித்து வந்த இவரது வீட்டின் பின்பகுதியில் குப்பை எரித்த அடையாளங்களும் காணப்படுவதாக தெரியவருகின்றது.

வீட்டுக்குச் சென்ற உறவினர் ஒருவர் சடலத்தை அடையாளம் கண்டு, பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் சடலம் மீட்கப்பட்டதுடன், முதியவரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles