Saturday, November 8, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஷாஃபியின் அடிப்படை உரிமைகள் மனு உயர்நீதிமன்றினால் நிராகரிப்பு

ஷாஃபியின் அடிப்படை உரிமைகள் மனு உயர்நீதிமன்றினால் நிராகரிப்பு

தம்மைக் கைதுசெய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என உத்தரவிடக் கோரி குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இது தொடர்பான விடயங்களை நீண்ட காலம் பரிசீலித்ததன் பின்னர் இந்த தீர்மானத்தை இன்று வழங்கியுள்ளது.

குருநாகல் காவல்துறை உத்தியோகத்தர்களால் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பணச்சலவை சட்டத்தின் கீழ் தம்மைக் கைதுசெய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது எனக் கூறி வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles