Sunday, November 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவட்ஸ்அப்பில் புதிய அம்சமொன்று அறிமுகம்

வட்ஸ்அப்பில் புதிய அம்சமொன்று அறிமுகம்

மெட்டா நிறுவனம் வட்ஸ்அப்பில் புதிய அம்சமொன்றை சேர்த்துள்ளது. இது பயனர்கள் குறிப்பிட்ட அரட்டைகளை பூட்டி வைக்கப்பதற்கு அனுமதிக்கிறது.

கடவுச்சொல் அல்லது கைவிரல் அடையாள ஸ்கேன் மூலம் இதைச் செயற்படுத்தலாம் என மெட்டா கூறுகிறது.

அரட்டை பூட்டி வைக்கப்பட்டவுடன், அதன் பெயர் மற்றும் செய்தி உள்ளடக்கத்தை மறைத்து, தனி கோப்புறையில் சேமிக்கப்படும் என்று மெட்டா கூறுகிறது.

இந்த புதிய அம்சம் தங்கள் அரட்டைகளை தனிப்பட்டதாக வைத்திருக்க விரும்பும் பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.

இதன் காரணமாக, யார் உங்கள் கைபேசியை எடுத்தாலும், உங்களது அனுமதியின்றி, பூட்டப்பட்ட அரட்டைகளை அணுகவும் பார்க்கவும் முடியாது.

மேலும் இது வட்ஸ்அப் வழங்கும் தனியுரிமையைப் பாதுகாக்கும் தனித்துவமான அம்சம் என்றும் பலர் இதனை வரவேற்றுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles