Tuesday, November 11, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் கருத்து: போதகருக்கு எதிராக விசாரணை

மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் கருத்து: போதகருக்கு எதிராக விசாரணை

மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் போதகர் ஒருவர் தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

பொறுப்பற்ற கருத்துக்கள் மத முரண்பாடுகளை உருவாக்கி நாட்டின் நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கக் கூடும் என்பதால் இது தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மேற்கண்ட உத்தரவை பிறப்பித்ததாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க கூறினார்.

போதகரின் கருத்து தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய உத்தரவுக்கமைய உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சாகல ரத்நாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

ஜெரோம் பெர்னாண்டோ என்ற போதகர் புத்தர் மற்றும் இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles