நாட்டின் 13 மாவட்டங்களின் 59 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக தேசிய டெங்கு கட்டுப்பட்டுப் பிரிவினால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, காலி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அதிக ஆபத்துள்ள பகுதிகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, அதிக ஆபத்துள்ள வலயங்களில் விசேட டெங்கு தடுப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.