எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புக்கு இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இலங்கை தாக்கல் செய்த வழக்கு இன்று (15) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் சங்கம் ஆஜராகவுள்ளதுடன்இ இது தொடர்பான வழக்கு கடந்த 9ஆம் திகதி சிங்கப்பூர் நீதிமன்றில் முதன்முறையாக அழைக்கப்பட்டது.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு கோரி கடந்த 26ம் திகதி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குத் தொடர்ந்தது.