இந்த வருடம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 525 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தைச் சந்தித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் பெறுமதி இலங்கை நாணயத்தில் சுமார் 165 பில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு ஏற்பட்ட இழப்பு மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.