நாடளாவிய ரீதியில் அனர்த்த நிலைமைகள் ஏற்படக்கூடிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீட்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆயுதப்படை, பொலிஸ் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளுடன் நேற்று (14) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை விரைவுபடுத்தவும், ஆறுகளின் வாய்க்கால்களை அகழ்ந்து அகலப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களை மீட்க படகுகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவது குறித்தும், அந்த நடவடிக்கைகளை துரிதமாக நிறைவேற்றுவது குறித்தும் இங்கு நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.