Sunday, August 10, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகம்பளை யுவதியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது

கம்பளை யுவதியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது

 கம்பளை – எல்பிடிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், கைதான சந்தேகநபர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் கம்பளை பதில் நீதிவான் முன்னிலையில் அவர் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த யுவதி துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குறித்த 22 வயதான யுவதியின் சடலம் நேற்றைய தினம் தோண்டி எடுக்கப்பட்டது.

கடந்த 7ஆம் திகதி முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட கம்பளை பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியை கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான 24 வயதுடைய சந்தேநபர், குறித்த யுவதியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதேவேளை, 22 வயதுடைய குறித்த யுவதியின் இறுதிக் கிரியைகள் கம்பளை – எல்பிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மயானத்தில் நேற்று மாலை இடம்பெற்று அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles