இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
வொஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதன் பேச்சாளர் இதனைக் கூறியுள்ளார்.
அதேநேரம் இலங்கையில் நியமிக்கப்படவுள்ள புதிய நிதி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் வரும் வாரங்களில் வொசிங்டனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.