Wednesday, November 12, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇளம் தம்பதி மீது காட்டு யானை தாக்குதல்

இளம் தம்பதி மீது காட்டு யானை தாக்குதல்

கொஸ்லந்த தியலும நீர்வீழ்ச்சியின் உடடியலும பகுதி சுற்றுலாப் பயணிகளிடையே இரவு நேர முகாமிடுவதற்கு மிகவும் பிரபலமான பகுதியாகும்.

குறித்த பகுதியில் நேற்று (11) இரவு முகாமிற்கு இளம் தம்பதியொன்று சென்றிருந்த நிலையில், அவர்களது கூடாரம் நேற்று இரவு காட்டு யானைகளால் தாக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே யுவதி உயிரிழந்ததுடன், இளைஞன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதி எனவும், காயமடைந்த இளைஞன் வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles