Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுவர்களுக்கு சொக்லெட் கொடுத்த இருவர் கைது

சிறுவர்களுக்கு சொக்லெட் கொடுத்த இருவர் கைது

தலைமன்னாரில் பாடசாலை மாணவர்களை கடத்திச் செல்ல முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

மன்னார் பகுதியில், சிறுவர்களை கடத்துவதற்கு இனந்தெரியாத குழுவினர் முயற்சித்துள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, பாடசாலை வளாகங்களில் பாதுகாப்பை வழங்க நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தலைமன்னார் கிராமப் பகுதியில், வியாபார பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனத்தில் பயணித்தவர்கள், இரண்டு சிறுவர்களுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி, அவர்களைக் கடத்துவதற்கு முயற்சித்ததாகவும், பொது மக்களின் உதவியுடன் அந்தக் கடத்தல் முறியடிக்கப்பட்டதாகவும், நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில், தலைமன்னார் பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles