Friday, May 8, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉர கொள்வனவுக்கு கூப்பன்

உர கொள்வனவுக்கு கூப்பன்

சிறுபோகத்திற்கு தேவையான உர கொள்வனவுக்கு கூப்பன்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு ஹெக்டெயருக்கு 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அதில் காணப்பட்ட சிக்கல்கள் காரணமாக கூப்பன்களை வழங்க தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அச்சிடுவதற்காக கூப்பன்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அச்சு நடவடிக்கைகளுக்கு ஒரு வாரம் தேவை எனவும் அதன் பின்னர் கூப்பன்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles