Thursday, March 26, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅழகு நிலையத்திற்கு வந்தவர்களிடம் திருடிய பெண் கைது

அழகு நிலையத்திற்கு வந்தவர்களிடம் திருடிய பெண் கைது

அழகு நிலையம் ஒன்றுக்கு வந்த வாடிக்கையாளரின் ஏடிஎம் அட்டையை திருடி 90,598 ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த பெண்ணொருவர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரமே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் அவிசாவளை – புவக்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடையவர் எனவும், குறித்த அழகு நிலையத்தில் உதவியாளராக கடமையாற்றியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் ஏடிஎம் அட்டையை திருடி வரகாபொல மற்றும் கம்பளை பிரதேசங்களிலும் பல பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இன்று (11) அவிசாவளை கௌரவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles