இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணப் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி அங்கு செல்ல போவதில்லை என தீர்மானித்துள்ளதால் போட்டித் தொடர் தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இரண்டு நாடுகளில் (ஹைப்ரிட் வடிவத்தில்) போட்டியை நடத்த பாகிஸ்தான் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு முன்மொழிந்துள்ளது.
பிரேரணையின் பிரகாரம், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாமல் வேறு நாட்டில் நடத்தப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன