பல கொலைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பூரு மூனா என அழைக்கப்படும் சங்க டி சில்வா மறைத்து வைத்திருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் 06 தோட்டாக்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பின்னர், சந்தேகநபர் பண்டாரகம – ரைகம பிரதேசத்தில் உள்ள மயானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, குறித்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டன.
குறித்த கைத்துப்பாக்கியானது சீனாவில் தயாரிக்கப்பட்ட விசேட வகை துப்பாக்கி எனவும் 16 தோட்டாக்களை தாங்கக்கூடியது எனவும் தெரியவந்துள்ளது.