Wednesday, December 17, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு13 வயது சிறுவன் தந்தையால் துஷ்பிரயோகம்

13 வயது சிறுவன் தந்தையால் துஷ்பிரயோகம்

பதின்மூன்று வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவரது தந்தையை அஹுங்கல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டுக்கு வந்து, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது.

சந்தேகநபர் தூங்கச் சென்றதும், வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுவன் வெளிநாட்டில் பணிபுரியும் தாயாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு சம்பவத்தை விபரித்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட சிறுவனின் தாய், தனது சகோதரியிடம் விபரங்களை கூறி, அவருடன் சிறுவனை அழைத்துச் செல்லுமாறு கூறியதாக விசாரணைகளில் தெரியவருகிறது.

அதன்படி, நேற்று அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டதுடன், சிறுவனை சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles