மிதிகம பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கடையொன்றின் உரிமையாளரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் சுட்டுக் கொல்ல முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (09) இரவு 8 மணியளவில் பதிவாகியுள்ளதாக மிதிகம பொலிஸார் தெரிவித்தனர்.
கடையின் உரிமையாளர் கடைக்குள் இருந்த போது, சந்தேக நபர் டி.56 துப்பாக்கியை பயன்படுத்தி சுட முயன்ற போதும், துப்பாக்கி வேலை செய்யாததால் அது தோல்வியடைந்தது.
பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வர்த்தகர், ஹரக் கட்டா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியை விடுதலை செய்யாதிருக்குமாறு கோரி போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.