தெஹிவளை பகுதியில், நேற்றிரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றிரவு, தெஹிவளை பகுதியில் உள்ள குளிரூட்டி திருத்தும் நிலையம் ஒன்றில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிலையத்துக்குள், பலவந்தமாக நுழைய முற்பட்டதாக கூறப்படும் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 27 வயதான ஒருவர் மரணித்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவம் குறித்து பொலிஸ் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.