நேற்றைய தினத்துடன் (08) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, நேற்று 312.19 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி இன்று 311 ரூபாவாக குறைந்துள்ளது.
அதேநேரம் விற்பனை பெறுமதியும் 326.31 ரூபாவிலிருந்து 325.95 ரூபாவாக குறைந்துள்ளது.