Thursday, April 23, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு7 கிலோ தங்கத்தை கடத்திவந்த வர்த்தகர் கைது

7 கிலோ தங்கத்தை கடத்திவந்த வர்த்தகர் கைது

சட்டவிரோதமான முறையில் பெருந்தொகையான தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (7) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 6 கிலோ 996 கிராம் தங்கத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அவற்றில் 4 கிலோ 942 கிராம் தங்க பிஸ்கட்களும்இ 2 கிலோ 942 கிராம் நகைகளும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மருதானையைச் சேர்ந்த 43 வயதான இந்த நபர், அடிக்கடி விமானப் பயணங்களை மேற்கொள்ளும் வர்த்தகரொருவர் எனவும் தெரியவந்துள்ளது.

விமான நிலையத்தில் அனைத்து விசாரணைகளையும் முடித்துக் கொண்டு, சுங்க வளாகத்தில் இருந்து வெளியே வந்த அவர், விமான நிலையத்தை விட்டு வெளியேறும்போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles