Sunday, September 14, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தவில்லை!

பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தவில்லை!

தம்மை பதவியில் இருந்து விலகுமாறு எந்த அறிவுறுத்தல்களும் ஜனாதிபதி தரப்பில் இருந்து தமக்கு விடுக்கப்படவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

முன்னதாக வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட சில மாகாண ஆளுநர்களை குறித்த பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், குறித்த விடயத்தின் உண்மைத்தன்மை தொடர்பில், வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிடம் எமது செய்தி சேவை வினவியது.

அதற்கு பதிலளித்த அவர், தமக்கு அவ்வாறான எந்தவொரு அறிவுறுத்தலும் கிடைக்கப்பெறவில்லை என அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles