Thursday, April 23, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்காத வாகனங்கள் கறுப்புப்பட்டியலுக்கு

அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்காத வாகனங்கள் கறுப்புப்பட்டியலுக்கு

5 வருடங்களாக வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்காத வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த விசேட அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான வாகனங்களை தகவல் அமைப்பிலிருந்து நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் தற்போது 83 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனினும், 60 இலட்சம் வாகனங்கள் மட்டுமே QR குறியீட்டு முறைமை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே, 5 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வருமானவரி அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்கள், மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகரின் உதவியுடன் தகவல் அமைப்பில் இருந்து நீக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles