Sunday, July 27, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமழையுடனான வானிலையால் தீவிரமடையும் நோய்கள்

மழையுடனான வானிலையால் தீவிரமடையும் நோய்கள்

நாட்டில் நிலவும் மழைக் காலநிலைக்கு மத்தியில் பல்வேறு நோய்கள் பரவுவது குறித்து சுகாதார நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவுவதில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேற்படி காலநிலைக்கு மத்தியில் நுளம்புகள் போன்றவற்றின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளமையே அந்த நோய்கள் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் வைத்தியர் பெரேரா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தற்போது நிலவும் காலநிலையில் தொற்று நோய்கள் பரவுவதும் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் மேலும் எச்சரித்துள்ளனர்.

இந்தநிலை குறித்து மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க எச்சரித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles