மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியா சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) காலை நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி இன்று (08) காலை 08.30 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 விமானத்தில் நாட்டை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியுடன் நிகழ்வுக்கு சென்ற இலங்கை தூதுக்குழுவினரும் அதே விமானத்தில் இலங்கை வந்துள்ளனர்.