Saturday, November 1, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனிமையில் இருந்த பெண்ணை வன்புணர்ந்த இளைஞன் கைது

தனிமையில் இருந்த பெண்ணை வன்புணர்ந்த இளைஞன் கைது

வெசாக் போயா தினத்தன்று தனது வீட்டில் வழிபாடு செய்து கொண்டிருந்த 47 வயதுடைய பெண்ணை வன்புணர்வு செய்த 27 வயது இளைஞனை வெலிகந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் வெலிகந்த சிங்கபுர பகுதியைச் சேர்ந்தவராவார்.

பலாத்காரத்திற்கு உள்ளானவர் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

பருக தண்ணீர் கேட்டு வீட்டிற்கு வந்த இந்த இளைஞன், வீட்டில் யாரும் இல்லாததை உணர்ந்து சம்பந்தப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அப்போது, ​​பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்கு வந்த அப்பகுதி மக்கள் இளைஞனை மடக்கி பிடித்தனர். எனினும் குறித்த இளைஞனின் தந்தை வந்து அவரை மீட்டு சென்றுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞனும் தந்தையும் வெலிகந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles