தொலைக்காட்சி நாடகம் மற்றும் திரைப்பட இயக்குனர் காமினி பிரியந்த கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் வெலிமடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
51 வயதுடைய திரைப்பட இயக்குeர் வெலிமடை நகரில் நேற்றைய தினம் நடந்து சென்று கொண்டிருந்த போது வேனில் வந்த நான்கு பேர் அவரை கடத்திச் சென்று தாக்கி, வீதியில் விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் கடத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளையும், கடத்தப்பட்ட போது வாகனத்தில் வைத்துத் தாக்கப்பட்ட காட்சிகளையும் பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய வேனையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருடன் காமினி பிரியந்தவுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.