Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்கள் மீள் இணைப்பு - சுற்றறிக்கை திங்களன்று வெளியீடு

அரச ஊழியர்கள் மீள் இணைப்பு – சுற்றறிக்கை திங்களன்று வெளியீடு

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அரச உத்தியோகத்தர்களை மீள சேவையில் இணைத்துக் கொள்வதற்கான சுற்றறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர, நேற்றைய தினம் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது, இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அரச ஊழியர்களை மீளவும் சேவையில் இணைக்க, கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி, அவர்கள் போட்டியிடவுள்ள தேர்தல் தொகுதியில் உள்ள அரச அல்லது பகுதிநிலை அரச நிறுவனத்தில் கடமையில் ஈடுபட்டிருப்பின், அந்தத் தொகுதிக்கு வெளியே இடமாற்றம் செய்து கடமையில் ஈடுபடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், அது தொடர்பான சுற்றறிக்கை நாளை மறுதினம் வெளியிடப்படவுள்ளதுடன், இதனூடாக, அவர்களுக்கான வேதனம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் ஜனாக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles